மிட்டாய் கவிதைகள்!

முந்தைய நாள் இரவு

July 20, 2013

exam night

இமைகள் இரண்டும் இணையத் துடிக்க,
காதல் வார்த்தைகள் ஒத்திவைப்பில் கிடக்க..,

என்றும் புரியா வார்த்தைகளை இன்று
ஒருநாளில் புரிந்து கொள்ளும் பேராசை!

ஒற்றைக் கண்ணில் படிக்க வைத்த
கைவிட்டுப் பிரியா, சிறு கைபேசி..

அலை பாயும் என் மனதினை
அடக்கி வைக்க ஒரு போராட்டம்..

புதிய பாடங்களா அல்ல
புது புது படங்களா என்றொரு குழப்பம்!

என் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க
தொடர் கிரிக்கெட் தொடர்கள்..

அப்பொழுதே கண்ணைக் கட்ட வைத்த
தலையணைப் புத்தகங்கள்..

ஒருவழியாய் படிக்க ஆரம்பிக்கிறேன்..
முதல் அதிகாலை காணப் போகும் சந்தோஷத்தில்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்